
வலுப்பெற்ற டிஜிட்டல் உலகில், பான் மற்றும் ஆதார் அட்டைகள் அன்றாடப் பயன்பாடுகளுக்கு மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் ஹோட்டல்களில் தங்குவது வரை, பல தேவைகளுக்கு அடையாளச் சான்றாக இந்த ஆவணங்கள் உதவுகின்றன. இந்நிலையில் பயனாளர்களின் பான் கார்டு தகவலை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற்று வருகிறது.
அதாவது, மோசடி செய்பவர்கள் மின்னஞ்சல் மூலம் அரசாங்க அதிகாரி போல் பயனாளரை தொடர்பு கொள்கின்றனர். இந்த மின்னஞ்சலில் இ-பான் கார்டை எவ்வாறு பதிவிறக்குவது என்பது குறித்த போலியான வழிகாட்டுதலை உங்களுக்கு அளித்து மோசடியில் ஈடுபடுகின்றனர். இந்த மோசடிகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் தேவையற்ற மின்னஞ்சல் அல்லது இணையதள லிங்க்கின் மூலம் பதிலளிப்பதை தவிர்க்கவும். இதை தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதேனும் மின்னஞ்சல் மூலம் எவரேனும் உங்களின் முக்கியமான தகவலைக் கேட்டால், சைபர் செல் துறையிடம் புகார் அளிக்க கூறி SBI தெரிவித்துள்ளது.