பாம்பன் ரயில் பாலத்தின் வழியாக படகுகள் செல்ல தடை – முக்கிய எச்சரிக்கை..!!

பாம்பன் ரயில் பாலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் படகுகள் மற்றும் கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

படகு செல்ல தடை:

பாம்பன் கடலின் நடுவே கிட்டத்தட்ட 535 கோடி ரூபாயில் 2.07 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், லிப்ட் வடிவில் துாக்கு பாலம் பொருத்தும் பணியில் தற்போது ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் பாம்பன் துறைமுக அலுவலகம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதாவது, பாம்பன் கடலுக்கு நடுவே நவ. 10 ஆம் தேதி முதல் துாக்கு பாலம் பகுதிகளில் இரும்பு உருளை அமைக்கும் பணிகள் நடைபெறும் எனவும், ஏகப்பட்ட மின்கேபிள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் பொருத்தும் பணி நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி நவ.10 ஆம் தேதி முதல் பாம்பன் பாலத்தை கடந்து படகுகள் செல்ல தடை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த கட்டுமான பணிகள் முடியவடையும் வரைக்கும் நவ.10 முதல் ஜனவரி 31 வரை பழைய ரயில் பாலத்தை படகுகள் மற்றும் கப்பல்கள் கடந்து செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

Whatsapp பயனர்களுக்கு வெளியான எச்சரிக்கை – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு..!!

Read Next

பப்பாளி சாப்பிட்ட பிறகு இதை சாப்பிடாதீங்க..!! அப்புறம் அவ்வளவு தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular