
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது உண்மைதான். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டம் வரை மனிதர்கள் வாழும் பகுதியில் பாம்பு பூரான் தேள் போன்ற விஷம் கொண்ட ஜந்துக்கள் அதிகம் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அதுவும் வயல்வெளி பக்கத்தில் உள்ள வீடுகளிலும் கிராமப்புறங்களிலும் அதிகமாக இவை தென்படும். இந்நிலையில் பூரான் மற்றும் தேள் போன்றவற்றின் விஷம் மனிதர்களை அதிக அளவு பாதிப்பதில்லை. ஆனால் பாம்புகள் மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். இதனால் பாம்பு மனிதனை கடித்தால் உயிரை கூட இழக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். இந்நிலையில் பாம்பு கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு சில பாம்புகள் கடித்தால் உடனே மரணம் ஏற்படக்கூடிய அளவிற்கு அந்த பாம்பின் விஷ தன்மை அதிகமாக இருக்கும். ஆனால் அனைத்து பாம்புகளும் அதிக விருத்தன்மை உடைய பாம்புகளாக இருக்காது ஒரு சில பாம்புகள் தான் அதிக விசு தன்மை கொண்டதாக இருக்கும். இந்நிலையில் பாம்பு கடித்த பிறகு முதலுதவி போன்று என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
பாம்பு கடித்தால் முதலில் கடித்த இடத்திற்கு மேல் நன்றாக கயிறால் இறுக்கி கட்ட வேண்டும். குறிப்பாக பாம்பு கடித்தவர்கள் நடந்தோ அல்லது ஓடவோ கூடாது. ஏனென்றால் நடந்தாலோ அல்லது ஓடினாலோ ரத்த ஓட்டம் அதிகரிக்கும் பொழுது விஷம் எளிதாக உடலில் அனைத்து பகுதிகளிலும் கலக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பின்பு மருத்துவரை பார்த்து சரியான சிகிச்சை எடுப்பதன் மூலம் உயிரை காப்பாற்ற முடியும்.