பாம்பு துரத்துவது போல கனவு வந்தால் நல்லதா?.. கெட்டதா?..
பலருக்கும் அடிக்கடி பாம்பு கனவில் விரட்டி கொத்துவது போல கனவு வரும். இதற்கு ஆன்மீக ரீதியாக சில பதில்கள் உண்டு. ஒருவருக்கு பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால் ஒருவரை பிடித்து இருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகும் என்பது முன்னோர்களின் வாக்கு. கனவில் பாம்பு நம்மை கடித்தால் நம்முடைய கஷ்டம் விலகும், தீராத கடன் பிரச்சனைகள் தீரும். கனவில் ஒற்றைப் பாம்பினை கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்பை கண்டால் ஆபத்துக்கள் நீங்கி, நன்மை உண்டாகும். அடிக்கடி பாம்பு கனவில் வருவது சிலருக்கு பயத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் அம்மன் ஆலயங்களில் இருக்கும் நாக சிலைகளை விளக்கேற்றி வழிபட்டு வரலாம்.