
அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய ரகமான, தம்பட்டை அவரை Sword Beans
நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய ரகமான காய்கறி வகைகளில், ஒன்றாகும். அதிக வறட்சியையும் தாங்கி வளரக் கூடியது. வருடம் முழுவதும் காய்த்து பலன் தரக்கூடியது.
தம்பட்டை அவரை அதிக ஊட்டசத்துக்களை கொண்ட உணவுகாய்கறியாகும். 24% புரதச்சத்தை கொண்டுள்ளது. தம்பட்டை அவரையின் காய்கள் ஒரு சிறு இனிப்பு சுவையோடு கூடிய அதிக சதைப்பகுதியை கொண்ட இறைச்சியின் சுவையை ஒத்திருக்கின்றது.
அவரையில் செடி அவரை, கொடி அவரை இருப்பதுபோல, தம்பட்டை அவரையிலும் செடிதம்பட்டை, கொடிதம்பட்டை, என்று இரண்டு வகைகள் உண்டு. விதைகளை வைத்தே தம்பட்டை அவரையின் இனம் பிரிக்கப்படுகிறது. சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் விதைகள் காணப்படுகிறது.
தைப் பட்டத்தில் தம்பட்டை அவரை விதைத்தால் நல்ல அறுவடையை சுலபமாக எடுக்கலாம். வெயில் காலங்களை தவிர்த்து மற்ற எல்லா மாதங்களிலும் தம்பட்டை அவரையை பயிர் செய்யலாம்.
தம்பட்டை அவரையை எப்படி சமைத்து சாப்பிடலாம்?
தம்பட்டை அவரை பிஞ்சாக இருக்கும் போதே, பறித்து பொரியல் செய்து சாப்பிடலாம். காரக்குழம்பு, சாம்பார், வற்றல் குழம்பிற்கும் கூட மற்ற காய்கறிகளை போல பயன்படுத்தலாம். முற்றிய பிறகு விதைகளை, வேக வைத்தோ, அல்லது முளைகட்டியோ, சாம்பார் குருமா போன்றவைகளில் சேர்த்து சாப்பிடலாம். தம்பட்டை அவரை பிஞ்சாக இருக்கும் போதே, பறித்து பொரியல் செய்து சாப்பிடும்போது அசைவ உணவுக்கு இணையான ஒரு சுவையை கொடுக்கக்கூடியது. முயற்சி செய்து பாருங்கள்.