பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணியானது அயர்லாந்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது, இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இரண்டு கோள்களை அடித்த வெற்றி பாதையை வழி வகுத்துள்ளார்.
மேலும் வெற்றியின் மூலம் இந்திய அணியானது கால் இறுதிப் போட்டிக்கு தேர்வானது, இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகள் வெற்றியும் 1 டிராவிலும் 7 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது மேலும் இந்திய அணியானது தனது அடுத்த போட்டியிருக்கு பெல்ஜீயத்தை ஆக1 அன்று எதிர் கொள்ள இருக்கிறது.