
ஆரோக்கியமான பார்வை வேண்டுமென்றால் காலை நேரத்தில் சில உணவு முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்…
பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகிவர கண்பார்வை தெளிவு பெறும், குழந்தைகளுக்கு கண் சூடு குறைய நெல்லிக்காய் சாறு பிழிந்து ஒவ்வொரு ஸ்பூன் இரு வேளை கொடுக்க வேண்டும், ஒரு கரண்டி சீரகம் தூள் செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலை மூழ்கி வர கண் நோய் குணமாகி கண் பிரகாசமாகும், பொலிவற்ற கண் சுண்டுவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தி பிடிக்க கிடைக்கும் பிராண முத்திரையால் கண் ஒளி பெருகும், மஞ்சள் கலக்கிய நீரில் அணைத்த துணியை காய வைத்து கண்களில் துடைத்து வந்தால் கிருமிகள் கண்களை தாக்குவதை எடுக்க முடியும், நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்து வர கண் சூடு தணியும், நந்தியவட்டம் பூவால் ஒத்தடம் கொடுக்க கண் எரிச்சல் தீரும், துளசி விதை அரச விதை அரைத்து காய வைத்து சாப்பிட கண் சூடு குறையும், சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து கொள்வதன் மூலம் கண்களுக்கு தேவையான புற ஊதா கதிர்களை பெற்றுக் கொள்ள முடியும், முருங்கைக்கீரை சாப்பிட கண் நோய் குணமாகும், வில்வம் நிறைவடைக்கு இளம் சூட்டுடன் கண்கள் மீது ஒத்தடம் கொடுக்க கண் வலி, கண் சிவப்பு அரிப்பு, நீங்கும்…!!