உத்தரப்பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 23 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூரில் தனது சகோதரனுடன் வசித்து வந்த முன்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இளைஞர் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு, இன்ஸ்டாகிராமில் கரண் தாக்கூர்(26) என்பவருடன் நட்பு ஏற்பட்ட நிலையில், அவரை சந்திக்க ஒருநாள் முன்னா நேரில் சென்றுள்ளார். முன்னாவை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற கரண், தனது நண்பர்களான தேவேஷ் சர்மா (24), அங்கத் குமார் (21) மற்றும் மோகன் பிரஜாபதி (20) ஆகியோருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியுள்ளார். அதோடு அதை வீடியோவாக பதிவு செய்த அந்த கும்பல், பணம் தராவிட்டால் வீடியோவை வெளியிடுவேன் என்று பவனை மிரட்டியுள்ளனர்.
இதனிடையே அங்கிருந்து தப்பிய முன்னா போலீசில் புகார் அளிக்க சென்ற நிலையில், அலைக்கழித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர், கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.