தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி சுரேஷ் (35) – மவுனிகா (30). இதில், மவுனிகா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு கணவரும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மனைவியிடம், சுரேஷ் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால், கடுப்பான மவுனிகா, மட்டன் குழம்பில் 15 வயாகரா கலந்து கணவனுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றார். ஆனால், அது நடக்காததால், மதுபானத்தில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து கொலைசெய்துள்ளார்.




