• September 29, 2023

பாலியல் ரீதியாக வேட்டையாடப்படும் சிறார்கள்..!! போதையில் கடலோரம் இளசுகள் செய்யும் அதிர்ச்சி செயல் அம்பலம்..!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள காரன்வால் போல்சீத் கடற்கரை முந்தைய காலங்களில் அதன் அழகுக்கு பெயர் பெற்று விளங்கியது. இந்த நிலையில் தற்போது வயது குறைவான சீரார்களின் பாலியல் குற்றங்களை அரங்கேற்றும் முக்கிய மையமாக திகழுவதாக  புகார் எழுந்துள்ளது.

இரவு நேரங்களில் போல்சீத் கடற்கரைக்கு தங்களின் துணையுடன் வரும் இளம் சிறார்கள் போதையில் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக அங்குள்ள பாதுகாப்பாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்த விஷயம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் தங்களின் பிள்ளைகளை சர்ச்சைக்குரிய இக்கடற்கரைக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து  வருகின்றனர்.

முந்தைய காலங்களில் அழகுக்கு பலரிடமும் பெயர் பெற்றிருந்த கோல்சீத் கடற்கரையில் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதாக அதிர்ச்சியான தகவலை காப்பாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி பனி வாரம் என்ற கொண்டாட்டத்தின் பேரில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்வதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்பச் சுற்றுலா மேற்கொண்டதாகவும் அவர்களில் ஐந்து ஜோடி கடற்கரையில் வைத்து உல்லாசமாக இருந்ததும் நடந்திருக்கிறது.  தாங்கள் உடலுறவு மேற்கொண்டதற்கு சாட்சியாக அங்கேயே காண்டம் போன்றவற்றையும் விட்டு சென்று அட்டகாசம் செய்துள்ளனர்.

இதனால் கடற்கரையின் அழகு கெடுவதாகவும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read Previous

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்-போக்சோவில் வாலிபர் கைது..!!

Read Next

நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த காமெடி நடிகர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular