
- கிருஷ்ணகிரி | பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண்! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
கிருஷ்ணகிரி மாவட்டம்: ஊத்தங்கரை தாலுகா படதா சம்பட்டியை சேர்ந்தவர் பெண் (வயது 40) . இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்ததுகூர்சம்பட்டியை சேர்ந்த தொழிலாளியான திருமால் (வயது 48) என்பவர், அவரது உறவுக்கார பெண் என்பதால் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரிடம் முறையற்ற வார்த்தைகளை பேசி பாலியல் தொந்தரவியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், படதாசம்பட்டியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் திருமால் தகாத முறையில் பேசி,பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து பெண்ணை மீட்டனர். இதனால் மனமுடைந்த அந்த பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் வரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் 12.12.2021 அன்று இறந்து விட்டார்.
இது தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமாலை கைது செய்து, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இது குறித்து விசாரணை நேற்று முடிந்து, குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி திருமாலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார்.