பாலூடன் இந்த பொருள் சேர்த்து குடிங்க.. வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்- பெண்கள் செய்து பாருங்க..!!

வெள்ளைப்படுதல் நோயால் அநேகமான பெண்கள் அவதிப்படுவது வழக்கம்.

 

 

பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்பட்டு, தொடர்ந்து சுரக்கும் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி தொற்று உண்டு பண்ணுகிறது. பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் சுரக்கும் திரவம் எல்லா சமயங்களிலும் கேடு விளைவிப்பது அல்ல.

சில சமயங்களில் அது துர்நாற்றம் இல்லாமல் இருக்கும். ஆனால் துர்நாற்றம் இருந்தால் தொற்றின் நிலை கொஞ்சம் அதிகமாகி உள்ளது. மருத்துவர்கள் அந்த திரவத்தை பரிசோதித்து, எந்த வகையை சார்ந்தது என்பதை அறிந்த பிறகே சிகிச்சை அளிக்க வேண்டும்.

இயற்கையாக எல்லாப் பெண்களுக்கும் இத்திரவம் பிறப்புறுப்பை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, மற்றும் கேடு விளைவிக்கும் பாக்டீரியாவை விரட்ட சுரக்கிறது என மருத்துவம் கூறுகிறது.

 

 

 

ஆனால் அந்த திரவத்தில் இருந்து துர்நாற்றம் எழுந்தாலும், நிறத்தில் மாற்றம் இருந்தாலும், வெள்ளைப்படுதல் “லீயுகோர்ஹியா” என்னும் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

அந்த வகையில், வெள்ளைப்படுதல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில இயற்கை வைத்தியங்களை தொடர்ந்து செய்து வந்தால், நிரந்தர தீர்வை எப்படி பெறலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

 வெள்ளைபடுதல் நோய்க்கு நிவாரணம் தரும் வைத்தியங்கள்

 

1. நெல்லிப் பொடி

நெல்லிக்காய் வெள்ளைப்படுதல் நோய்க்கு சிறந்த மருந்தாக பார்க்கப்படுகிறது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நாளடைவில் வெள்ளைப்படுதல் குறையும்.

2. வெண்டைக்காய்

வெண்டைக்காய் 100 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க விட்டு, அது ஆறியதும் குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் குணமடையும். அதே சமயம், 100 மிலி தேன் சேர்த்து தினசரி இருவேளை அருந்தினால் ஒரு மாதத்தில் தீர்வு கிடைக்கும்.

3. நன்கு கனிந்த வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழங்கள் வெள்ளைப்படுதல் நோய்க்கு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. கனிந்த வாழைப்பழத்தை நெய்யில் கலந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சினை குணமாகும். மாறாக ஒரு பழத்துடன் ஒரு டம்ளர் பால், அரை தேக்கரண்டி நெய் சேர்த்து சாப்பிட்டாலும், பலன் கிடைக்கும்.

4. கொத்தமல்லி விதைகள்

வெள்ளைப்படுதலுக்கான சிகிச்சையில் கொத்தமல்லி விதைகள் முக்கியம் பெறுகின்றன. ஒரு கைபிடி அளவு கொத்தமல்லி விதைகள் எடுத்து, அதில், ஒரளவு நீர் ஊற்றி இரவு முழுவதும் வைக்கவும். அந்ந நீரை காலை எழுந்தவுடன் தினமும் குடித்து வந்தால் விரைவில் வெள்ளைப்படுதல் குறையும்.

5. இளநீர்

தினமும் இளநீர் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகிவிடும். உடலை குளிர்ச்சியாக்கி, நச்சு பொருட்களை வெளியேற்றும் வேலையை இளநீர் செய்கிறது. காரட் ஜூஸ் அல்லது ஆட்டு பால் குடிக்கலாம். அதுவும் நல்ல மருந்தாக பார்க்கப்படுகிறது.

Read Previous

வாயு நெஞ்சுவலி, மாரடைப்பு நெஞ்சுவலி எவ்வாறு வேறுபடுகின்றது?.. அலட்சியம் வேண்டாம்..!!

Read Next

முகம் குண்டா இருக்குனு கவலையா?.. கொழுப்பை கரைக்க இந்த பயிற்சிகளை அடிக்கடி பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular