
பால் பணியாரம்..!! இது எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாமல் முழிக்கிறீர்களா அப்போ இந்த பதிவை படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!
பால் பணியாரம் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த காலத்தில் இருக்கும் பலருக்கும் இந்த பால் பணியாரம் எப்படி செய்வது என்பது தெரியாது. பால் பணியாரம் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பச்சரிசி அரை கப் மற்றும் உளுந்து அரை கப் தேங்காய் பால் ஒரு கப் காய்ச்சின பால் கால் கப் மற்றும் ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை உப்பு ஒரு சிட்டிகை சர்க்கரை தேவையான அளவு மற்றும் எண்ணெய் தேவையான அளவு இவை எல்லாம் தான் இந்த பால் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள். இப்போது பச்சரிசியும் உளுந்தையும் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் சேர்த்து நன்றாக மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த உடன் உப்பு சேர்த்து கலந்து தனியாக எடுத்து வைக்கவும். மாவனது வடை மாவு பழத்தை விட கெட்டியாக அதேசமயம் தொட்டால் பட்டு போல மிருதுவாக இருக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மாவை சுண்டைக்காய் அளவுக்கு கிள்ளி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.
பின்பு பரிமாறுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு. ஒரு கப்பில் தேங்காய் பால் காய்ச்சின பால் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பொறித்து வைத்த பணியார உருண்டைகளை எடுத்து இந்த கலவையில் சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து சாப்பிட்டால் சுவையான பால் பணியாரம் ரெடி.