
பீகார் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாய் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னா அருகே நியாஜிபோர் என்கின்ற இடத்தில் இரு குழுக்கள் துப்பாக்கிகளுடன் கடுமையாய் மோதி கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் குண்டு பாய்ந்து மூன்று பேர் பரிதாபமாய் உயிர் இழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
காவல் துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் சுட்டு கொலை செய்யப்பட்டவர்கள் பிரதீப் குமார், சைலேஷ்குமார் மற்றும் ஜெய்சிங் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த மிண்டூஸ் என்பவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
400 ரூபாய் பால் பாக்கி தராத தொடர்பாக ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சூட்டில் 3 பேரின் உயிரை காவு வாங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக கொலையாளிகளை காவல் துறையினர் தீவிரமாய் தேடி வருகின்றனர்.