தற்போது மக்கள் தங்களுடைய கைகளில் பணத்தை வைத்துக் கொள்ளாமல் , பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வங்கியில் பணத்தை சேமித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும், பிக்சட் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வட்டி விகிதம் கடந்த 2 வருடங்களாக அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி உள்ளனர். அந்த வகையில், தற்போது சில வங்கிகளில் FD வட்டியானது 9% வழங்கி வருகிறது. சிறு வங்கிகளில் 3 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் மமூத்த குடிமக்களுக்கு 9.5% வட்டி வழங்கி வருகிறது. அதனைத்தொடர்ந்து , மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கும் சிறு வங்கிகளின் பெயர் மற்றும் விவரங்களை காண்போம்..
FD வட்டி விகிதங்கள்:
` 3 வருடங்களுக்கு பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்த மூத்த குடிமக்களுக்கு நார்த் ஈஸ்ட் பைனான்ஸ் வங்கி 9.5% வட்டி விகிதம் வழங்கி வருகிறது. அதேபோல், உட்கர்ஸ் மற்றும் சூர்யாதாய் வங்கிகளில் 9.1% வட்டி விகிதமும், ஜனா பைனான்ஸில் 8.75%, யூனிட்டி பைனான்ஸில் 8.65%, எக்விடாஸ் 8.5% மற்றும் AJ சிறு பைனான்ஸ் நிறுவனத்தில் 8% வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், அதிக வட்டி விகிதத்தை வழங்கி வரும் வங்கிகளை அறிந்து மக்கள் டெபாசிட் செய்வது சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.