தற்போது உள்ள காலகட்டத்தில் பலவிதமான உணவுகளுக்கு நம் நாக்கு அடிமையாகிவிட்டது. ஒரே உணவுக்கு பல்வேறு விதமாக பெயர்களை கொண்டு அதை குறிப்பிடுகிறார்கள். அந்த வகையில், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று BULLSEYE என்ற ஒரு உணவை குறிப்பிட்டுள்ளர்கள். இது என்ன, எப்படி செய்வதென்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக BULLSEYE எப்படி செய்வதென்று இப்பதிவில் நாம் காணலாம்.
முதலில் 2 முட்டைகளை எடுத்து, அதில் இருக்கும் வெள்ளைக்கருவையும் மஞ்சள்கருவையும் தனியாக பிரித்து வைக்கவேண்டும். குறிப்பாக மஞ்சள்கருவை உடையாமல் பிரித்து வைத்துக்கொள்ளவேண்டும். இப்போது தோசை டவாவில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி முதலில் பிரித்து வைத்திருந்த வெள்ளைக்கருவை ஊற்ற வேண்டும். அதில் இப்போது பிரித்துவைத்திருந்த மஞ்சள் கருவை உடையாமல் போட வேண்டும். மேலே மிளகுத்தூள் தூவி வெந்தவுடன், அதை பிரட்டிப்போடாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது BULLSEYE தயார்.




