
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், இதன் மூலமாகத்தான் முதன்முதலாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராம் ராமசாமி.
இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். இதன் பிறகு அவர் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர் ஏடிகே உடன் சேர்ந்து காஸ்மோ தம்பி என்ற ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். அந்த ஆல்பம் பாடலில் அவருக்கு ஜோடியாக ரஷி என்பவர் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஷி பிரபாவோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
இதை பார்த்து ரசிகர்கள் ராம் அந்த ஆல்பம் பாடலில் தனக்கு ஜோடியாக நடித்த வரையே காதலித்து அகேர்ட் செய்துவிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து கொண்டு வருகின்றனர். மேலும் போஸ்டரை பார்த்த ஏடிகே “எல்லாம் சரி , ரொம்ப நாள் அவ வீட்ல தங்கிறாத” என கலாய்க்கும் வகையில் கமெண்ட் செய்து உள்ளார்.கமெண்டை பார்த்த இணையவாசிகள் ராமை வறுத்தெடுத்து கொண்டு வருகின்றனர்.