
ஒரு ஊரில் அப்பா மகன் வாழ்ந்து வந்தார்கள் மிகப்பெரிய தொழிலதிபர் அப்பா அவருக்கு நேரம் முதலீடு ஆனால் அவருடைய மகன் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தான். நேரத்தின் மதிப்பை எப்படியாவது புரிய வைக்க வேண்டும் என்று எண்ணினார். அப்பா ஒருநாள் காலை மகனை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த பூங்காவிற்கு சென்றார். அங்கு நிறைய பிச்சைக்காரர்கள் இருப்பது வழக்கம் அதில் அப்பா மூன்று குறிப்பிட்ட பிச்சைக்காரர்களுக்கு மட்டும் கட்டு பணத்தை எடுத்து ஆளுக்கும் பகிர்ந்து கொடுத்தார் .இதை பார்த்த மகன் நான் கேட்டால் ஒரு பைசா கூட தர மாட்டார். ஆனால் இவர்களுக்கு இவ்வளவு பணம் தருகிறார் என்று நினைத்துக் கொண்டான் .நாட்கள் நகர்ந்தன ஒரு வருடம் ஆனது அப்பா மறுபடியும் மகனை அழித்துக் கொண்டு அதே பூங்காவிற்கு சென்று பார்த்தார் .இப்பொழுது மூன்று பேரில் ஒருவன் மட்டுமே இருந்தான். அந்த பிச்சைக்காரனிடம் சென்று போன வருடம் உங்களுக்கு பணம் கொடுத்தேனே அதையெல்லாம் என்ன செய்தீர்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறீர்களே என்று கேட்டார் .அதற்கு அந்த பிச்சைக்காரனும் நான் அந்த பணத்தை வைத்து இரண்டு மாதம் நன்றாக சாப்பிட்டேன் பிறகு பணம் தீர்ந்தது மறுபடியும் இங்கேயே வந்து விட்டேன் என்று கூறினார். எங்கே என்று கேட்டதற்கு அப்பொழுது அந்த பிச்சைக்காரன் எதிரில் இருக்கும் ஐஸ்கிரீம் கடையை காண்பித்து அந்த கடை நீங்கள் கொடுத்த பணத்தினால் உருவானது என்று சொன்னாராம். இன்னொரு பிச்சைக்காரன் கொடுத்த பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஏமாந்து விட்டான் என்று சொல்லி முடித்தாராம் பிச்சைக்காரன். இதை கேட்ட அப்பா தன்னுடைய மகனிடம் கூறினார்.மூன்று பேருக்கும் ஒரே நாள் ஒரே அளவிலான பணத்தை தான் கொடுத்தேன். அதில் ஒருவன் பணத்தை வீணடித்து விட்டு போன வருடம் எந்த நிலையில் பார்த்தோமோ அதே நிலையில் இருக்கிறான் .இன்னொருவன் சூதாட்டத்திற்கு அடிமையாகி இன்னும் மோசமான நிலையில் இருக்கிறான். இன்னொருவன் மட்டுமே பணத்தை மிக சரியாக பயன்படுத்தி அனைவரும் பாராட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளான். அதற்கு காரணம் நான் கொடுத்த பணத்தை அவன் முதலீடாக பார்த்தான் இந்த பணத்தை விடவும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் அதிக மதிப்பு வாய்ந்தது நாம் நினைத்தால் நாம் நேரத்தை வீணாக்கவே முடியும். அல்லது அதையே முதலீடாகி ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கவும் முடியும் என்று சொல்லி முடித்தாராம் அப்பா.