பிடிக்காத ஹெர் ஸ்டைல் காரணமாக சோகம்..!! 9 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை.!!

தெலுங்கானா மாநிலத்தில் ஒன்பது வயதுடைய சிறுவன் தனக்கு பிடித்த ஹேர்ஸ்டைல் தனக்கு செய்யவில்லை என்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூபாத் மாவட்டம் கங்காரம் பகுதியில் வசித்து வருபவர் காந்தராவின். இவரின் இளைய மகன் ஹரிஷ் வரதன் (வயது 9). சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறான். சிறுவன் பள்ளி விடுதியில் தங்கி இருந்து பயின்று வந்த  நிலையில் தற்போது கோடை விடுமுறை காரணத்தால் வீட்டிற்கு வந்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் பள்ளி தொடங்க உள்ளது.  இதனிடைய வீட்டில் இருந்த சிறுவனுக்கு தந்தை சிகை அலங்காரம் செய்துள்ளார். தந்தை தனது மகனுக்கு பிடிக்காத வகையில் சிகை அலங்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன சிறுவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். கடந்த ஐந்து நாட்களாக உயிருக்கு போராடிய சிறுவன் இன்று பரிதாபாய் உயிர் இழந்துள்ளான்.தனக்கு பிடித்த ஹேர் ஸ்டைல் அமையவில்லை என்று ஒன்பது வயதுடைய சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

டிடிஎப் வாசனை தொடர்ந்து விஜே சித்துவும் கைது? – காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.!!

Read Next

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு..!!எப்போது?? பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular