நிர்வாக சிக்கல்களால் தாமதமான 2025-26 ஐஎஸ்எல் கால்பந்து தொடர், வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 91 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் சொந்த மைதானம் மற்றும் எதிரணியின் மைதானம் என இரண்டு முறைகள் மோதவுள்ளன.




