
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் ‘ஜெனரிக் உட்பட அனைத்து மருந்துகளையும் விற்பனை செய்ய விரைவில் ‘முதல்வர் மருந்தகம்’ திறக்கப்படும்’ என்று அறிவித்தார். அதாவது, இந்த திட்டத்தின் நோக்கம் விலையில் மக்களுக்கு மருந்துகளை விற்பனை செய்வதாகும். இதனை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் இந்த முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இந்த திட்டத்தை திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் 33 இடங்களில் இந்த முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. மேலும், இதற்கு விண்ணப்பம் செய்த பி.பார்ம் மற்றும் டி.பார்ம் முடித்தவர்கள், தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சுமார் 840 பேருக்கு, தமிழ்நாடு அரசு மருந்தகங்கள் வைப்பதற்கு உரிமம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.