பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தழும்புகளை மறைக்க சிரமப்படுகிறீர்களா..? அப்படி என்றால் இந்தப் பதிவு உங்களுக்காக தான்..!!

பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்பு அதாவது குழந்தை பிறந்த பின் அவர்களின் வயிற்றில் தழும்புகள் ஏற்படும். இந்த தழும்புகளை மறைய செய்ய இந்த பதிவில் மூன்று வகையான மருத்துவ முறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

குழந்தைகள் பெற்ற பிறகு வயிற்றில் வரக்கூடிய தழும்பு என்பது அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் இயல்பான விஷயம்தான். அதாவது வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுது குழந்தை வேகமாக வளர்வதற்காக பெண்களுக்கு உடல் வேகமாக வளரும். அதேபோல குழந்தை பெற்ற பின்பு வேகமாக வளர்ந்த உடலில் இருக்கத்தன்மை குறைந்து தோல் ஆனது சுருக்கமாகவோ அல்லது தழும்புகளாகவோ மாறும். இதை மறைய செய்வதற்கு பெண்கள் பலவித வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.

இந்த பதிவில் பிரசவ காலத்திற்குப் பின் ஏற்படும் தழும்புகளை எவ்வாறு மறைய செய்யலாம் என்பது குறித்து காணலாம்.

மருத்துவமுறை 1

பிரசவத்திற்கு பின் பெண்களின் வயிற்றில் ஏற்படும் தழும்புகளை மறைய செய்ய முட்டை மட்டுமே போதுமானது. அதாவது முட்டையின் வெள்ளை கரு மட்டுமே போதும். வேறு எந்த ஒரு மருந்தும் தேவையில்லை. முதலில் இளஞ்சூடான வெந்நீர் கொண்டு வயிற்றை சுத்தமாக துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையின் வெள்ளை கரு மட்டும் எடுத்து நன்கு அடித்து பின்னர் அதை தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் இதை இளஞ்சூடான தண்ணீர் கொண்டு கழுவி விடலாம்.

இதை தொடர்ந்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன் மூலம் பிரசவ தழும்புகள் நாளடைவில் மறைய தொடங்கும்.

மருத்துவ முறை 2

பிரசவத்திற்கு பின் பெண்களின் வயிற்றில் ஏற்படும் தழும்புகளை மறைய செய்ய கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம், கற்றாழை ஜெல் மட்டும் எடுத்து வயிற்றில் உள்ள தழும்புகள் மீது தேத்து வந்தால் பிரசவ தழும்புகள் அப்படியே மறைய தொடங்கும்.

மருத்துவ முறை 3

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைய செய்ய சுத்தமான மலைத்தேனை பயன்படுத்தலாம். சுத்தமான மலைத்தேனை எடுத்து வயிற்றில் தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து தேன் நன்கு காய்ந்த பின் இளஞ்சூடான தண்ணீரால் கழுவி வந்தால் தழும்புகள் மறையும்.

Read Previous

உங்கள் சருமத்தின் அழகை மேம்படுத்த வேண்டுமா..? இந்த ஜூஸை குடித்தால் போதும்..!!

Read Next

உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..? இந்த தேன் பூண்டு சாப்பிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular