
தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு பாத்திரம் அல்லது சில்வர் குடத்தில் குடிக்கின்ற தண்ணீரை நிரப்பி விடுங்கள். உங்கள் வீட்டு சமையல் அறையில் தெற்கு சுவர் பக்கம் அல்லது வடக்கு சுவர் பக்கம் இந்த குடத்தை வைத்து விடவும். எக்காரணத்தைக் கொண்டும் இதற்கு பிளாஸ்டிக் குடம் பயன்படுத்தக் கூடாது அதை மட்டும் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் சமைப்பதற்கு குடிப்பதற்கு இந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை எடுத்துப் புழங்கவும். அவ்வளவுதான் பரிகாரம். மறுநாள் காலை பழைய தண்ணீரை வேறொரு பாத்திரத்தில் மாற்றி விட்டு இந்த பாத்திரத்தை விளக்கி இதில் புது தண்ணீர் ஊற்றி வைத்து புழங்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையை மட்டும் நீங்கள் பின்பற்றி வந்தால் உங்கள் வீட்டில் பெண்களுக்கு மனநிலை குழப்பமடையாமல் சீராக இருக்கும். தேவையில்லாத பிரச்சனையை தவிர்க்க முடியும்.