
பல்வேறு ஏழை, எளிய நடுத்தர மக்கள் தங்குவதற்கு வீடுகள் கூட இல்லாமல் இருப்பதால், அவர்களுக்கு உதவும் விதமாக கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி “பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா” என்னும் வீடு கட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள ஊரக பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பிரதமரின் இத்திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட 209 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், இத்தகைய திட்டத்தில் பயன்பெற தேவையான தகுதிகள் பற்றி கீழே விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
PMAY திட்டத்திற்கான தகுதி:
- இத்தகைய திட்டத்தில் பயன்பெற 18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 55 வயதிற்கு உட்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும், ஏற்கனவே கான்கிரீட் வீடு வைத்துள்ள நபராக இருக்க கூடாது.
- பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.