
- பிரதமர் மோடியை சந்தித்த தம்பிதுரை.!
பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை சந்தித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து உள்ள நிலையில் மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டு இருந்தது.
ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடி அமித்ஷா நட்டா ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியதற்கு தம்பிதுரை பிரதமர் மோடி சந்திப்பு தான் காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.தமிழக அரசியல் நிலவரம் அதிமுக விவகாரம் பற்றி அவர்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக டெல்லியில் ஒரு முக்கியமான மூவை செய்த தம்பிதுரை நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியதை ஓபிஎஸ் தரப்பு உன்னிப்பாக கவனித்துள்ளது.
இதையடுத்தே பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதினார் ஓபிஎஸ் என்கிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை நேற்று நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை அவர்கள் சந்தித்து உள்ளார். சிறப்பான பட்ஜெட்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்ததாக கூறப்படுகிறது.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ள நிலையில் அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.