பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தடை இல்லாத வளர்ச்சி பயணம்..!! அமித்ஷா வாழ்த்து..!!

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவில் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடை இன்றி தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பாரத பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அப்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், முதல்வர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் கலந்துகொண்ட அமித்ஷா தனது சமூக வலைதளத்தில் “இந்திய கலாச்சாரத்தின் மையமாக பாபா விசுவநாதன் நகரமான காசியில் இருந்து மூன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். கடந்த 10 ஆண்டுகளில் காசிக்கு உலக தரம் வாய்ந்த பல்வேறு வளர்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அவர் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேம்படுத்தி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடை இல்லாமல் தொடர நான் பிரார்த்திக்கின்றேன். இந்த முறையும் காசி மக்கள் நரேந்திர மோடியை சாதனைக்குரிய வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறேன்”, என குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

பொதுமக்களை விடாத துரத்தி துரத்தி கடிக்கும் தெருநாய்கள்..!! ஐந்து பேர் படுகாயம்..!!

Read Next

மயிலாடுதுறையில் கொடூரம்..!! தீக்குளித்த காதலியை காப்பாற்ற முயன்ற காதலன் மரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular