
மலையாள திரையுலகத்தைச் சேர்ந்த இளம் நடிகையான அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகை அபர்ணா நாயர் அச்சையன்ஸ், கடலு பரஞ்ச கத, மகதீர்த்தம், உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சந்தனமழ, ஆத்மசகி உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலம் ஆனார்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தை அடுத்த கரமனா பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று இரவு 7.30 மணி அளவில் நடிகை அபர்னா நாயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்மாவும் தங்கையும் வீட்டில் இருந்த போதே நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட அபர்ணா நாயருக்கு 33 வயது ஆகிறது. அவருக்கு சஞ்சித் என்கிற கணவரும் இரு குழந்தைகளும் உள்ளனர்.