
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியை சேர்ந்த பிரபல காமெடி நடிகர் கயாலி சஹாரன் மீது ஹனுமன்கார் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் காவல் நிலையத்தில் பாலியல் வன் கொடுமை புகாரளித்துள்ளார். அந்த புகாரில், “திரைத்துறையில் வேலை வாங்கி தருவது தொடர்பாக பேச ஓட்டலுக்கு வருமாறுகயாலி சஹாரன் கேட்டு கொண்டார். இதை நம்பி சென்றபோது அவர் தன்னை பாலியல் வன் கொடுமை செய்துவிட்டார்” என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிபடையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.