பிரபல குணச்சித்திர நடிகர் ஈ. ராமதாஸ் காலமானார்…!

இயக்குநரும், நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்…!

நடிகர் ஈ. ராமதாஸ் தமிழில் காக்கி சட்டை, விசாரணை, அறம், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் “ஆயிரம் பூக்கள் மலரட்டும்” என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.

இந்நிலையில், ஈ.ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமானார். இவருடைய திடீர் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கின்றது.

இவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருடைய திடீர் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை சமூக வலைதளத்தின் மூலமும், நேரில் சென்றும் தெரிவித்து கொண்டுள்ளனர்.

Read Previous

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…! கனிமொழி தலைமையில் திமுக இரண்டாக உடையும்…!

Read Next

கடந்த 24 மணி நேரத்தில் 94 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular