பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் ஜூடோ ரத்னம் காலமானார்…!

பல சினிமா ஹீரோக்களுக்கு சண்டை பயிற்சியாளராக திகழ்ந்த பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் (92) காலமானார்….!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்னம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று குடியாத்தம் டவுனில் காலமானார். இவருக்கு வயது 92. இவர் ரஜினியின் ‘முரட்டுக்காளை’ படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இதில் ரயில் வரும் சண்டைக்காட்சி பிரமிப்பு ஏற்படுத்தி இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் படங்களில் 46 படங்களுக்கு சண்டை பயிற்சியாளர் இவர்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூடோ கே.கே.ரத்னம் மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து…! முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு…!

Read Next

6 சீனர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு…! ஜப்பான் கடற்பகுதியில் மூழ்கிய ஹாங்காங் சரக்கு கப்பல்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular