பிரபல சமையல் கலைஞர் குரேஷி காலமானார்..!!

பிரபல சமையல் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான குரேஷி காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். 93 வயதான இவர் பல்வேறு விதமான தனித்துவமான உணவு வகைகளில் வல்லவர். 1931 ஆம் ஆண்டு லக்னோவில் பிறந்த குரேஷி, தனது உணவுகளின் சுவைக்காக பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். மேலும், ஐடிசி ஹோட்டல்களில் தலைசிறந்த சமையல்காரராக இருந்த அவர், சமையல் கலையில் அவர் ஆற்றிய பணிக்காக 2016 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Read Previous

1 முதல் 8 ஆம் வகுப்புவரை உதவித்தொகை அறிவிப்பு..!!

Read Next

உள்நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறை 3.8 சதவீத வளர்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular