
சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த “வாணி ராணி”, “பாண்டவர் இல்லம்”, “பிரியமான தோழி”, “செவ்வந்தி” ஆகிய சீரியல்களை இயக்கியவர்தான் ஓ என் ரத்தினம்.
குடும்ப கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இவருடைய சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது .இயக்குனர் ஓ என் ரத்தினத்தின் மனைவி பிரியா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தற்பொழுது பள்ளி விடுமுறை என்பதினால் பொள்ளாச்சியில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தம்பதியினர் இருவருக்கும் இடையில் சொத்து மற்றும் தொழில் தொடங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்படி நேற்றைய இரவும் இருவருக்கும் இடையே தகராறு பட்டுள்ளது. அப்பொழுது ரத்தினம் தனது மனைவியை அடித்துள்ளார் .இதனால் மனமுடைந்த பிரியா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பிரியாவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் .அதன்பின் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.