கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சார்ந்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதிர் போஸ் என்பவர் உடல்நல குறைவின் காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் இருந்துள்ளார்.
திரைப்பட இயக்குனர் சுதீப் முதன்முதலாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜெஸ்சி மற்றும் பிஜி விஸ்வம்பரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பின் பல்வேறு படங்களில் உதவி இயக்குனராக பதவி புரிந்து உள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முதன்முறையாக “கபடி கபடி” என்கின்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் கலாபவன் மணி, முகேஷ், ரம்பா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் மூலம் தான் சுதிர் போஸ் இயக்குனர் என்பது மலையாள திரைப்பட உலகிற்கு தெரிய வந்தது. திரைப்படத்திற்கு நதிஷா இசை அமைத்திருந்தார் இத்திரைப்படம் வரும் முன் “மின்னா மினுக்கே” என்ற பாடல் இத்தனை படத்தில் நடித்த கலாபவன் மணி பாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்களிலேயே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாட்டினால் இந்த படமே சூப்பர் ஹிட் ஆனது என சொல்லலாம்.
ப்ரீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாய் வந்து வந்தார் .திடீரென உடல்நலம்குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாய் உயிரிழந்துள்ளார். மலையாள நடிகர்கள், இயக்குனர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதி சடங்கு வருகின்ற ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என்று அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.