பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை, மேலும் காவல்துறையினர் தற்கொலைக்கான விடயம் கிடைப்பதற்காக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மலைகா அரோரா அவர், இவரின் தந்தை அணில் அரோரா இன்று செப்டம்பர் 11 மும்பையில் பாந்தாராவில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார், மேலும் தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் எந்த ஒரு கடிதம் அல்லது விடயங்களும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது, அணில் அரோரா அவர்களின் இறப்பிற்கு காரணம் என்னவென்று விரைவில் தெரியவரும் என்றும் அதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர், மேலும் அணில் அரோராவின் மரணம் அவரின் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை மற்றும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது, பிரபலங்கள் பலரும் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்..!!