தி சல்லிவன்ஸ்’ தொடர் மூலம் ‘ஆஸ்திரேலியாவின் தாய்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகை லோரெய்ன் பெய்லி (89), சிட்னியில் உள்ள முதியோர் இல்லத்தில் காலமானார். 1950-களில் தொடங்கி 7 தசாப்தங்களாக திரை மற்றும் மேடை நாடகங்களில் ஜாம்பவானாக திகழ்ந்த இவர், 3 முறை மதிப்புமிக்க ‘லோகி’ விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுடன் போராடி வந்த இவரது மறைவு, உலகெங்கிலும் உள்ள இவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




