2கே கிட்களில் மிகவும் பரிச்சயமான நபர் டிடிஎஃப் வாசன். கோவையில் உள்ள ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்தவர். தற்பொழுது 27 லட்சத்திற்கும் மேற்பட்ட பாளோவர்களை கொண்டு இருப்பது அனைவருக்கும ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் 250 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டுவது, வீலிங் செய்வது போன்ற சாகசங்களை செய்து இன்றைய இளைஞர்களை கவர்ந்துள்ளார். இது தவறான வழிகாட்டுதல் என்று ஒரு பக்கம் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
அவர் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக அவர் செயல்பட்டதால் மருத்துவமனையில் வைத்து போலீசார் டிடிஎஃப் வாசனை கைது செய்தனர். அதன் பின் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்த அவரது ஓட்டுநர் உரிமம் பத்து ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது காரில் ஊர் ஊராக சுற்றி வரும் அவர் பழையபடி திரும்பி வந்து விட்டதாக ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டியதாகவும் மேலும் கார் டாஸ் போர்டில் உள்ள கேமராவில் அதை வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும் கூறி காவல் துறையினர் ஆறு பிரிவுகளில் டிடிஎஃப் வாசல் மீது வழக்கு பதிவு செய்து செய்தனர்.