• September 24, 2023

பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் இருசக்கர வாகனத்தில், சாகசம் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் காயம்..!! போலீசார் வழக்கு பதிவு..!!

பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் அவரது கை, கால் முறிந்துள்ளது. அது தவிர பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 279/337), டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில், சாகசம் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் வாசனுக்கு கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read Previous

“சனதானம் குறித்து பேச வேண்டாம்..!!” தமிழக எம்பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கட்டளை.!!

Read Next

ஓம மோர்க் குழம்பு செய்வது எப்படி..? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular