வேளாங்கண்ணியில் உள்ள அன்னை மாதாவின் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பலர் தங்களின் கோரிக்கைகளை முழங்காலிட்டு நடந்து செல்வதன் மூலம் நிறைவேற்றியும் வேண்டியும் வந்தனர்..
ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணியில் நடக்கும் திருவிழாவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும், தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வருபவர்கள் நிறைய பேர் அவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற சுடு மணலில் முழங்காலிட்டு கோவிலுக்கு நடக்கின்றனர், தீராத நோய்களையும் கடன் பிரச்சினைகளையும் குடும்ப சண்டை சச்சரவுகளையும் அன்னை வேளாங்கண்ணி மாதா நிறைவேற்றுவதாகவும் சரி செய்வதாகவும் பக்தர்களின் பிரார்த்தனைகளை மன உருகி தீர்த்து வைப்பதாகும் அவர்கள் சொல்லி தங்களது முழங்காலால் அன்னை மாதாவின் ஆலயத்தைச் சுற்றியுள்ள மணல்கள் மீது முழங்கால் மண்டியிட்டு நடக்கின்றனர், இதனால் தங்களது வேண்டுதல் நடக்கும் என்றும் நடந்ததற்கு நிறைவேற்றுவதற்காக இந்த வேண்டுதலை செய்கிறோம் என்றும் கூறுகின்றனர்..!!