
சமூகவலைத்தளத்தில் வீடியோ எடுக்கும்போது ஓடும் காரில் சீட்பெல்ட் அணியாமல் இருந்ததற்காக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது…!
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்தின் வடக்குப் பகுதிக்கு பயணம் செய்தபோது சமூக ஊடகங்கள் தன்னை படம் பிடிப்பதற்காக காரின் பின்புறம் சீட் பெல்ட்டைக் கழற்றி பயணம் செய்துள்ளார். சீட் பெல்ட் அணியாததால் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் போடப்பட்டுள்ளது.
இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார். பிரிட்டிஷ் சட்டத்தின் படி வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 100 பவுண்ட் முதல் 500 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.