2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுற்றது. அதன் முடிவுகள் வெளியாகி பாரத பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார், 18 வது மக்களவைத் தேர்தலின் போது இந்தியா கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு இடையிலான உறவில் ஏற்பட்ட கசப்பு தற்போது முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது வய நாட்டில் நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டார். மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் 3 லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேபரேலி தொகுதியில் முதன்முறையாக ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். சோனியா காந்தி ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. தற்போது ஒரே தொகுதியில் மட்டுமே எம் பி ஆக முடியும் என்ற காரணத்தால் ரேபரேலி தொகுதியை ராகுல் காந்தி தக்க வைத்துக்கொண்டார். வயநாடு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடைத்தேர்தல் பிரியங்கா காந்தியை வேட்பாளராக அறிவித்தார், இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பதை ஒப்புக்கொண்டார்.
அதன் மூலம் கூட்டணியின் முக்கிய அங்கமான காங்கிரஸ் உள்ள உறவை இனிமை ஆக்குவதையும் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டி உள்ளார், காங்கிரஸ் உடனான திரிணாமுல் காங்கிரஸ் உறவுகள் மேம்படுவதற்கு அதிரஞ்சன் சவுத்ரியன் பிரச்சனையின் தீர்வு ஒரு காரணம். இது சவுத்ரியின் கூர்மையான மற்றும் அடிக்கடி திணிக்கப்பட்டு வந்த கருத்துக்கள் திரிணாமுல் மற்றும் காங்கிரஸுக்கு இடையே மோதலுக்கு காரணமாய் அமைந்தது.
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் மம்தா பானர்ஜி முடிவிற்கு இதுவும் ஒரு காரணியாய் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை சவுத்ரி பஹாரம் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு பிறகு அவர் தான் அவர் தலைவர் பதவியும் ராஜினாமா செய்துள்ளார். சவாலை எதிர்கொண்ட திரிணாமுல் மாநிலத்தின் மொத்தமுள்ள 40 இரண்டு இடங்களிலும் 29 இடங்களில் வெற்றி பெற்றது.