பிரியாணியின் வாசனை மற்றும் சுவையைக் கூட்டும் பொருளாக அன்னாசிப்பூ உள்ளது, அந்த அன்னாசி பூவின் பயன்களை நாம் அறிவதே இல்லை..
பொதுவாக பிரியாணி மற்றும் நெய் சாதங்களில் நாம் வாசனைக்காகவும் சுவைக்காகவும் அன்னாசி பூவை பயன்படுத்தி வருகிறோம், ஆனால் அதனின் நன்மைகள் நாம் அறிவதே இல்லை தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பது அன்னாசிப்பூ பெரும் பங்கு வகிக்கிறது, புரதம், கொழுப்பு, மக்னீசியம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் தாதுகள் அடங்கிய கூட்டுப் பொருளாக காணப்படுகிறது, மேலும் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது இதனால் மனித உடலில் நோய் தாக்கப்படுவதற்கான காரணிகள் மிகவும் குறைவாக உள்ளது என்று அறிவியல் ரீதியாகவும் மருத்துவம் ரீதியாகவும் மருத்துவர்கள் உணர்த்துகின்றனர், உடல் கழிவுகளை வெளியேற்றி நாள்தோறும் உடலை புத்துணர்ச்சியாக வைப்பதில் பெரும் பங்கு வகுக்கிறது, உடலுக்கு தேவையான நல்ல உறக்கத்தை தருவதோடு முகத்தை பளபளப்பாக வைத்திருக்கிறது. மேலும் சுவாச பிரச்சனையை நீக்கி வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை சரி செய்கிறது..!!