
பிரியாணியில் நெய்யை எப்போது சேர்க்க வேண்டும் என்று தெரியுமா..?? தெரியவில்லை என்றால் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!
பிரியாணி இஸ் எ எமோஷன் சார் என்ற மாதிரி பிரியாணி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பிரியாணி பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்நிலையில் பிரியாணி என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருந்தாலும் பிரியாணி சாப்பிடுவோம். சோகமாக இருந்தாலும் பிரியாணி சாப்பிடுவோம். இந்நிலையில் பிரியாணியில் நெய்யை எப்போது சேர்க்க வேண்டும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
பிரியாணி தயாரிக்க பட்ட சோம்பு மற்றும் கசகசா போன்றவற்றை தாளிக்கும் போது சேர்க்கும் எண்ணெயின் அளவில் கால் பங்கு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பிரியாணி தயாரித்து முக்கால் பதத்தில் தம் போட்டு எடுப்போம் தம் பிரிக்கும் போது மீதமுள்ள முக்கால் பங்கு நெய் சேர்த்து கிளறி மூடி வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து பரிமாறினால் பிரியாணியில் நெய்யின் மணம் மண மணக்கும்.