நாம் அன்றாட உணவில் நறுமணத்திற்காக சேர்த்து கொள்ளும் மசாலாக்களில் ஒன்றுதான் பிரிஞ்சி இலை. இந்த பிரிஞ்சி இலையை நாம் பொதுவாக பிரியாணியில் பிளேவர்க்காக சேர்த்துக் கொள்வோம். இதை தமிழ்நாட்டில் அனைவரும் பிரியாணி இல்லை என்றே அழைப்பார்கள். இந்த பிரியாணி இலை நறுமணத்திற்காக மட்டும் இல்லாமல், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பிரியாணி இலை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக உள்ளது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை ஒரு கப் கொதிக்கும் நீரில் கலந்து, சிறிது நேரம் கொதித்த பிறகு வடிகட்டி தினமும் டீ , காபி போன்ற பானங்களுக்கு பதிலாக இதை குடித்து வரலாம். இப்படி செய்யும் போது சர்க்கரை அளவு சமநிலையில் இருக்கும் என்று கூறுகின்றனர். மேலும், இந்த பிரிஞ்சி இலையை சர்க்கரை நோயாளிகளுக்கு சமைக்கும் உணவுகளில் கலந்தும் சமைத்துக் கொடுக்கலாம்.