பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது செய்யக்கூடாத தவறுகள்..!! பெற்றோர்களே கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க..!!

பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது இந்த தவறை எல்லாம் செஞ்சுடாதீங்க..!!

இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு குழந்தைகளை பராமரிக்கும் முறை என்பது பலருக்கும் தெரிவதில்லை. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் வீட்டில் ஒரு மூதாட்டி இருப்பார் அவர்தான் குழந்தையையும் குழந்தையுடைய தாயையும் குழந்தை பிறந்ததிலிருந்து பராமரிப்பார். குறிப்பாக குழந்தையை வீட்டில் உள்ள வயதான பாட்டிகள் தான் குளிப்பாட்டுவது மற்றும் குழந்தைக்கு என்னென்ன செய்ய வேண்டும். எது எல்லாம் செய்யக்கூடாது என்று தெளிவாக தாயிடமும் கூறுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேலை காரணமாக சொந்த ஊரை விட்டு வெளியே இருக்கும் தாய்களுக்கு தன் குழந்தையை பராமரிக்கும் முறை முழுவதுமாக தெரியாது. இந்த வகையில், குழந்தைகளை பிறந்ததிலிருந்து எவ்வாறு பராமரிக்க பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தை பால் குடித்தவுடன் ஒருபொழுதும் குளிக்க வைக்க கூடாது. குழந்தையை குளிக்க வைக்க சில கடலை மாவு மற்றும், பாசிப்பயிறு மாவு பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு சிலர் அதையெல்லாம் தவிர்த்து பேபி சோப்புகளை கூட பயன்படுத்துவார்கள். இதையெல்லாம் வைத்து குழந்தையை மென்மையாக குளிக்க வைக்கலாம். வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்பாட்டினால் போதும். மேலும், குழந்தையை குளிக்க வைக்கும் போது தண்ணீர் அதிக அளவு சூடாகவோ இல்லை குளிர்ந்த நிலையிலோ இருக்கக் கூடாது. மிதமான சூட்டில் இருக்க வேண்டும். இவ்வாறு மிதமான சூடு உள்ள நீரில் தான் குழந்தைகளை நாம் குளிக்க வைக்க வேண்டும். மேலும், மிருதுவான துணியை பயன்படுத்தி குளிக்க வைத்த உடன் குழந்தைகளை துடைக்க வேண்டும். மேலும் அந்தந்த பருவத்திற்கு ஏற்ற உடைகளை தான் குழந்தைகளுக்கு அணிய வேண்டும். அதுபோல குளித்து முடித்தவுடன் குழந்தைகளுக்கு இருக்கும் நகங்களை வெட்ட வேண்டும். ஏனென்றால் குளித்து முடித்தவுடன் சிறிது ஈரத்தோடு இருக்கும் அப்போது விரல் நகங்களை வெட்டினான் மிருதுவாக எளிதில் வெட்ட முடியும். மேலும், குளிர்காலத்தில் அடிக்கடி குளிக்க வைக்க வேண்டாம்.

Read Previous

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் கட்டாயமாக இந்த பதிவை படிக்கவும்..!!!

Read Next

அறிவியலும்..!! மூடநம்பிக்கைகளும்..!! சிந்திக்க வைக்கும் பதிவு..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular