பிறந்த குழந்தையை சூரிய ஒளியில் காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரிய வேண்டுமா..!!

பிறந்த குழந்தையை தினமும் காலை சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள் ஆனால் சிலர் குழந்தையின் சருமம் பாதிக்கப்படலாம் என பயப்படுவது உண்டு இந்த பதிவில் சூரிய ஒளியால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

சூரிய ஒளி வைட்டமின் டி யின் சிறந்த ஆதாரமாகும் இது குழந்தையின் உடல் கால்சியம் உறிஞ்சதலை அதிகரித்து எலும்பு வலிமைக்கு உதவுகிறது, கைக்குழந்தையை தினமும் சூரிய ஒளியில் சிறிது நேரம் வைப்பது மூலம் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பை ஏற்படுத்துவதை தடுக்க முடிகிறது, பிறந்த குழந்தையை சிறிது நேரம் சூரிய ஒளியில் காட்டும்போது தூக்க தரத்தை மேம்படுத்த முடியும் அவை தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் அளவை சீராக்கும் நிச்சயம் உதவியாக இருக்கும். குழந்தைகள் விரைவாக தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருக்க உதவும், சூரிய ஒளி குழந்தையின் உடலில் சிரோட்டோனின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது இது மகிழ்ச்சியை ஹார்மோனாகவும் கருதப்படுகிறது இது மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வை ஊக்குவிப்பது, சூரிய ஒளி வைட்டமின் டி சத்தை ஊக்குவிப்பது மட்டுமின்றி குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்ப்பு சக்திக்கு பலன் அளிக்கிறது, மிதமான சூரிய ஒளி வெளிப்பாடு வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது, சூரிய ஒளி வழிபாடு குழந்தையின் மூலை வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது புதிதாக கற்கும் விஷயங்களை மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ள உதவுகிறது மேலும் மூளை செயல்பாட்டில் அதிகரிக்கிறது, முழு பலனை பெற புதிதாக பிறந்த குழந்தையை காலை 7 மணி முதல் 10 மணிக்குள் தான் காட்ட வேண்டும் அதுவும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தான் சூரிய ஒளியில் வைக்க வேண்டும் அதற்கு மேல் வைத்தால் குழந்தைக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும், சூரிய ஒளியில் குழந்தையை காட்டும் முன்பு சருமத்தை பாதிக்காத படி ஆடைகளை அணிவிக்க வேண்டும் குறிப்பாக காற்று வேகமாக வீசும் இடத்தில் குழந்தையை வைக்கக்கூடாது அதேபோல் சூரிய ஒளி குழந்தையின் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..!!

Read Previous

பவர் வாக் பற்றி தெரியுமா உடல் எடையை குறைக்க இந்த வாக்கின் முறை தான் சிறந்தது..!!

Read Next

உங்கள் வாழ்க்கையை இந்த 7 செயல்கள் மூலம் சிறப்பாக்குங்கள்..!! மனநிலை மாற இந்த ஏழு உத்திகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular