பிறர் விட்ட சாபத்திலிருந்து எப்படி தப்பிப்பது..!! இந்தப் பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Oplus_131072

பிறர் விட்ட சாபத்திலிருந்து எப்படி தப்பிப்பது, கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவுதான் இது.

யாரோ விட்ட சாபம்
தற்போது உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கின்றதா?

மறைமுகமாக யாரோ விட்ட சாபத்திலிருந்து விடுபட சுலபமான பரிகாரம்!

ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என்றால், கட்டாயம் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கர்மவினை காரணமாக இருக்கும்.

அந்த வினை யாரோ ஒருவர் நமக்கு விட்ட, சாபமாக கூட இருக்கலாம்.

எத்தனையோ குடும்பங்கள், சில சாபத்தினால் கடைசிவரை தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு, வாரிசு கூட இல்லாமல் அழிந்து, போயிருக்கின்றது.

ஒரு குடும்பத்தையே பஸ்பமாகும் அளவிற்கு, அடுத்தவர்கள் வயிறு எரிந்து விடும் சாபம் பலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாபம் உங்களுக்கு இருந்தது என்றால், அதை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி..

சேதாரம் இல்லாத 8 (ஓட்டை, பூச்சி அரிக்காத) முழு மாஇலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தேங்காயை உடைத்து, துருவி, அந்த தேங்காய் துருவலில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து பிசைந்து, தேங்காய் சர்க்கரை சேர்த்த கலவையை
தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் கட்டாயம், உங்கள் வீட்டு குலதெய்வத்தின் படம் இருக்கும்.

அந்த குலதெய்வத்தின் முன்பாக மாஇலைகளை அடுக்கி வைத்துவிட வேண்டும். ஒரு மாவிலை பக்கத்தில், இன்னொரு மாவிலையை வைத்து காம்பு பக்கம் இறைவனை பார்த்தவாறும் நுனி பக்கம் உங்களை பார்த்தவாறு இருக்கும்படி வரிசையாக அடுக்கி வைத்து கொள்ளவும்.

அந்த மாவிலைகளின் மேல், தேங்காய் துருவல் சர்க்கரை கலந்த கலவையை, ஒரு ஸ்பூன் அளவு வைக்க வேண்டும்.

இப்படி, தேங்காய் சர்க்கரை கலவையை, நைவேத்தியமாக மாவிலைகளின் மீது வைத்தெ குலதெய்வத்துக்கு படைத்து உங்களுக்கு இருக்கும் சாபம் நிவர்த்தி ஆக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இந்த பரிகாரத்தை யார் வேண்டும் என்றாலும் அவரவர் வீட்டிலேயே செய்யலாம்.

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும் அதற்கான விமோசனம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இலலை.

தேய்பிறை அஷ்டமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

தொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமி திதிகள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால், உங்க சாபம்
நிங்கும்….

மாதம் மாதம் வரும் உங்கள் பிறந்த நட்சத்திர அன்று உங்களால் முடிந்தவரை பசியால் இருக்கும் ஜீவராசிகளுக்கு உணவு அளித்து வாருங்கள்.

 

Read Previous

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?? கொய்யா பழத்தில் உள்ள எண்ணற்ற நன்மைகள்..!!

Read Next

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்..!! அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular