பிளவுபடுகிறது அதிமுக? பாஜகவின் மாஸ்டர் பிளான் என்ன? – சட்டத்துறை அமைச்சரின் பகீர் தகவல்.!!

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கடந்த தேர்தல் வரை தங்களுக்குள் கூட்டணி அமைத்து அரசியல் பணி மேற்கொண்டு வந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதும் கூட்டணி உடைந்தது.

அதிமுகவா..? பாஜகவா..? என்ற பேச்சு தமிழ்நாட்டில் இருந்தது. பாஜக தலைமையில் மற்றொரு கூட்டணியும் உருவாகியது, அதிமுக 2024 மக்களவைத் தேர்தலை தேமுதிகவுடன் கைகோர்த்து களம் கண்டது. தொடக்கத்தில் இருந்தே அதிமுகவை பாஜக பிளவு படுத்தி வருகின்றது என அவ்வப்போது திமுக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.

இதனை உறுதி செய்யும் வகையில் அதிமுகவில் துணை பொது செயலாளர் ஆக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்றைய தலைமையான எடப்பாடி பழனிச்சாமையால் நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தொடர்ந்து அதிமுகவில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் நான்காம் தேதிக்குள் அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்படும் அதனை பாஜக செய்தி முடிக்கும் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

Read Previous

பூர்வகுடிகளின் வீடுகளை சூறையாடி மீட்கப்படும் வனத்துறை நிலங்கள்..!! தர்மபுரியில் பரபரப்பு சம்பவம்.!!

Read Next

“டேங்க் மேல உட்கார்ந்துதான் நாங்க ரொமான்ஸ் பண்ணுவோம்” – காதலியுடன் ஜாலி ரைடு..!!அதிரடி காட்டிய எஸ்.பி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular