விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு உலகம் எங்கும் செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து பித்தளை அகல்விளக்கு பிள்ளையார் சிறப்பு தரிசனத்திற்காக வரவேற்கப்பட்டுள்ளது..
திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 20 அடி உயர விளக்கு கணபதி சிலை பிரதிஷ்டியை செய்யப்பட்டுள்ளது, ரசாயனம் பூசப்பட்ட சிலைகளால் ஏற்படும் நீர் மாசுபாட்டை தவிர்க்க 2500 பித்தளை அகல் விளக்கு மற்றும் 1500 தாம்பூல தட்டுகளால் 8 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறிய விழா குழுவினர் ஒன்பது நாட்களுக்குப் பிறகு விளக்கு தாம்பரம் தட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார், மேலும் இதன் மூலம் காற்று மாசுபாடு ரசாயன போன்றவற்றை தவிர்க்க முடியும் என்றும் இவை சிறப்பு தரிசனம் மிக்க பிள்ளையாராக மக்களுக்கு காட்சி தருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் விழா குழுவினர் கூறியுள்ளனர், திருவள்ளூரில் அனைத்து மக்களும் பித்தளை அகல் விளக்கால் செய்யப்பட்ட பிள்ளையாரை கண்டு தரிசனம் பெற்று சென்றனர் மேலும் கொழுக்கட்டை பொங்கல் என பிரசாதங்கள் வழங்கப்பட்டது..!!