
- பிஸ் ப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள் :
சாதம்- 1 கப்
பொரித்த மீன் -2 துண்டுகள் (முள் உதிர்த்தது)
வெங்காயம்-2
முட்டை-1
கேரட்,பீன்ஸ், கோஸ்- ஒரு கப்
பச்சைமிளகாய்-1
பூண்டு -7 பல்
சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- 5 ஸ்பூன்
ப்ரைட் ரைஸ் பொடி-1 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு ஏற்ப
டொமெட்டோ சாஸ்- ஒரு டீஸ் ஸ்பூன்
செய்முறை :
1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு,வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் முட்டை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.முள் உதிர்த்த மீனை சேர்த்து வதக்கவும்.பொடியாய் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.
2.காய்கறி பாதி சுருண்டதும் ப்ரைட் ரைஸ் பொடி சேர்த்து வதக்கவும்.சாஸ் வகைகளை சேர்த்து வதக்கவும்.கலவை நன்கு சுருண்டதும் சாதத்தை கொட்டி மூன்று நிமிடங்கள் கிளற வேண்டும்.