
காலம் காலமாக பெண்கள் என்றாலே திருமணத்திற்கு முன்னர் ஒரு வீட்டிலும் திருமணத்திற்கு பின்னர் ஒரு வீட்டிலும் வாழ்வது என்பது காலங்காலமாக நடைபெற்று வரும் ஒரு பழக்கமாகவே இருக்கிறது. ஆம் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தனது தாய் வீட்டில் மிகவும் சுதந்திரமாகவும், உரிமையாகவும் தான் நினைத்தது எல்லாம் நடக்கும் வகையிலும் வாழ்வார்கள். திருமணம் ஆகி கணவன் வீட்டிற்கு செல்லும் பொழுது அந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
இந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசியில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிலும் ராணி போல் வாழ்வார்களாம். அந்த ராசியில் பிறந்த பெண்கள் மாமியார் வீட்டிலும் தனது தாய் வீட்டில் இருந்தபடியே இருப்பார்களாம்.
மேஷம், கன்னி, விருச்சிகம் இந்த ராசியில் பிறந்த பெண்கள் தான் புகுந்த வீட்டில் ராணி போல் வாழும் பாக்கியத்தைக் கொண்ட பெண்கள்.
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு சாமர்த்தியம் மற்றும் நுண்ணறிவு என்பது சற்று அதிகமாகவே இருக்கும். இதனால் இவர்கள் புகுந்த வீட்டில் உள்ளவர்களை அடக்கியாலும் தன்மை பெற்றும் மற்றவர்களை தங்களின் சொல்பேச்சை கேட்குமாறு எவ்வாறு வைக்க வேண்டும் என்றும் நன்றாக தெரியும்.எனவே மேஷ ராசியில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிலும் ராணி போல் சுதந்திரமாக வாழ்வார்கள்.
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் திருமணத்தைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். ஏனெனில் இந்த ராசி பெண்கள் மிகவும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்களாகவும் எந்த ஒரு தவறாக இருந்தாலும் சரி முகத்திற்கு நேர் சொல்லும் நபர்களாக இருப்பதாலும் இவர்களை புகுந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். மேலும் கணவருக்கு ஆதரவாக இருப்பதால் மாமியார் வீட்டிலும் இவர்களுக்கு மவுசு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதனால் தான் கன்னி ராசியில் பிறந்த பெண்கள் கணவர் வீட்டில் ராணிகளாக வாழ்கிறார்கள்.
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் பிறந்த வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி ராணியாக தான் வாழ்வார்கள். இவர்கள் தன்னுடைய சுதந்திரத்தை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் சரி இந்த ராசிகள் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டில் இவர்களால் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும்.